வெளிநாடு ஒன்றிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் தங்கியிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெயாங்கொட, நைவல பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த குறித்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வதாக தனிமைப்படுத்தல் மத்திய நிலைய அதிகாரிகள் முறைப்பாடு செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 2019 ஆம் ஆண்டு 2 ஆம் மாதம் 6 ஆம் திக ‘அஸ்மா உம்மா’ என்ற போலி அடையாள அட்டையுடன் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டதாகவும், அவர் முல்லைத்தீவைச் சேர்ந்த பாத்திமா ரம்சா என்பது தெரியவந்துள்ளது என்றும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர் இன்று (ஜூலை 20) அத்தனகல மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார், மேலும் அவர் ஏன் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் மற்ற பெண்கள் பற்றிய தகவல்களை சேகரித்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலதிக விசாரணைகளை வெயாங்கொட பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.