பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகாசஸ் உளவுமென்பொருள் இருந்ததை, அந்நாட்டு தேசிய சைபர் செக்யூரிட்டி நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற தொழில்நுட்ப நிறுவனம் பெகாசஸ் என்ற உளவுமென்பொருளை தயாரித்து, அரசுகளுக்கும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் விற்பனை செய்கிறது.
இதனிடையே, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்டோர் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்நாட்டின் சைபர் பாதுகாப்பு அமைப்பு, மீடியாபார்ட் என்ற ஒன்லைன் புலனாய்வு இதழைச் சேர்ந்த 2 செய்தியாளர்களின் செல்போன்களில் பெகாசஸ் ஸ்பைவேர் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், பெகாசஸ் தொடர்பான குற்றச்சாட்டை முதன் முதலில் ஒரு அரசு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.