இளைஞர்களை ஈர்க்க பிரித்தானியா புதிய திட்டம்

இளைஞர்களை ஈர்க்க பிரித்தானியா புதிய திட்டம்

பிரித்தானியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்களை ஈர்க்கும் பொருட்டு கபாப், டாக்ஸி சவாரி உள்ளிட்ட இலவசங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.

பிரித்தானியாவில் 18 முதல் 30 வயது வரையான இளையோர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், தயக்கத்தில் இருக்கும் இளைஞர்களை ஈர்க்க இலவச திட்டங்களை அரசு அறிவிக்க முடிவு செய்துள்ளது.

இதில் 30 நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணைய பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், இதனால் அதிக இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என நம்புவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது Uber, Bolt, Deliveroo மற்றும் Pizza Pilgrims ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இலவசங்களை அளித்து இளைஞர்களை ஈர்க்கும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

அரசு வேறுவகையில் சிந்தித்திருக்க வேண்டும் என லண்டன் குயின் மேரி பல்கலைக்கழக பேராசிரியர் Tim Bale விமர்சித்துள்ளார். இதனிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்லும் இளைஞர்களுக்கு இலவச சவாரியை Bolt நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதல் தமது வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி தொடர்பில் Uber தகவல் தெரிவிக்க உள்ளது. பிரித்தானியாவில் 18-29 வயதுடைய இளைஞர்கள் 67% தங்கள் முதல் டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர். 

ஆனால் மேலதிக இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு துரிதப்படுத்தி வருகிறது. இளைஞர்களை ஈர்க்கும் பொருட்டு பிரித்தானியா மட்டுமல்ல, ரஷ்யாவிலும் இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு 100 டொலர் ஊக்கத்தொகை அளிக்க மாகாண அரசுகளை ஜனாதிபதி பைடன் அறிவுறுத்தியுள்ளார்.  

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *