“ஆப்கானை கைப்பற்றினால் அங்கீகரிக்க மாட்டோம்..”

“ஆப்கானை கைப்பற்றினால் அங்கீகரிக்க மாட்டோம்..”

ஆயுதப் போராட்டம் மூலமாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்தால், அந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட 12 நாடுகள் அறிவித்துள்ளன.

இந்தியா, அமெரிக்கா, கத்தார், ஐக்கிய நாடுகள் சபை, சீனா, உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, நார்வே, தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் முன்னேறுவது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர்

இந்த ஆலோசனைக் கூட்டம் கத்தார் நாட்டின் தலைநகர், தோஹாவில் நடைபெற்றது. இதில்தான் இந்த முக்கியமான முடிவு எட்டப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில்,

ஆப்கானிஸ்தானில் அமைதி நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

மேலும் முக்கியமாக ஆயுதப் போராட்டம் மூலமாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அமைந்தால் அதை அங்கீகரிக்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளன என்றார்.

இது மிகவும் எளிமையான விஷயம். ஆப்கானிஸ்தானை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கும் எந்த சக்தியும் அங்கீகரிக்கப்படாது, அது சட்டபூர்வமானதாக இருக்காது, சர்வதேச அங்கீகாரத்தை பெறாது என்றார்.

சர்வதேச சமூகங்கள் இந்த விஷயத்தில் ஒரே குரலில் பேச ஒன்றாக முன் வந்துள்ளன.

மேலும் அவர்கள் மறுசீரமைப்பை ஆதரிக்கவில்லை என்று அறிவித்தனர் என்று பிரைஸ் மேலும் கூறினார்.

சமீபத்தில், தாலிபான்கள் குழு ஒன்று சீனா சென்றது. அங்கு வெளியுறவு துறை மட்டத்திலான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

ஆப்கானிஸ்தானில் இருந்து சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை யார் எடுத்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம் என்று அப்போது தாலிபான் குழு கூறியது. ஆனால் இப்போது, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளோடு சேர்ந்து சீனாவும், தாலிபான்கள் பலவந்தமாக அரசு அமைத்தால் ஏற்க மறுப்போம் எனக் கூறியுள்ளது.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *