ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் கொவிட் டோஸ்களை உருவாக்க ஒரு உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒரு முன்னணி சீன மருந்துக் கம்பெனியுடன் சீனாவும் இலங்கையும் இருதரப்பு “தடுப்பூசி இராஜதந்திரத்தை” ஆழப்படுத்த உள்ளன.
புதிய தொழிற்சாலை ஒரு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்படும், ஒன்பது மில்லியன் கொவிட் -19 தடுப்பூசிகளை சீன மருந்தக நிறுவனத்திடமிருந்து இலங்கை பெற அனுமதிக்கும் என்று சீனாவுக்கான இலங்கை தூதர் பாலித கோஹன ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்தார்.
இலங்கையின் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமான சினோவாக் பயோடெக் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் “நிறைவடைய மிகவும் நெருக்கமாக உள்ளது” என்று பாலித கோஹன கூறினார்.
“இது ஹம்பாந்தோட்டையில் உள்ள பிரத்யேக மருந்து உற்பத்தி இடத்தில் அமைக்கப்படும்” என்று இலங்கை தூதர் தெரிவித்தார்.
சினோவாக் தடுப்பூசி அதன் “அவசர-பயன்பாட்டுப் பட்டியல்” கீழ் உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சீன டோஸ்களில் ஒன்றாகும்; மற்றொன்று அரசுக்கு சொந்தமான சினோபார்ம் ஆகும்.
ஜனவரி மாத இறுதியில் இலங்கையில் தடுப்பூசியை அறிமுகப்படுத்திய அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 500,000 டோஸ்களை இந்தியா கொழும்புக்கு பரிசளித்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த வளர்ச்சி வந்துள்ளது.