நாளை முதல் கிளிநொச்சி முடக்கம்?…

நாளை முதல் கிளிநொச்சி முடக்கம்?…

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் அனைவரும் எதிர் வரும் 20 ஆம் திகதி வெள்ளிக் கிழமை முதல் 25 ஆம் திகதி வரை தங்களது வர்த்தக நிலையங்களை பூட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நேற்று(18) கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வர்த்தக சங்கத்தின் தலைவர் இ. விஜயசிங்கம், செயலாளர் ச.பாஸ்கரன், பொருளாளர் க. ஆனந்தவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டு இவ்வறித்தலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

நாளுக்கு நாள் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இதுவொரு ஆபத்தான நிலைமை எனவே வர்த்தகர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது வர்த்தக நிலையங்களை சில நாட்களுக்கு பூட்டு தொற்று பரவுவதனை கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளோம்.

அந்த வகையில் எதிவரும் 20 ஆம் திகதி முதல் 25 திகதி வரை மருந்தகங்கள், வாகன திருத்தகங்கள் தவிர ஏனைய அனைத்து வியாபார நிலையங்களையும் பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக் காலப்பகுதிகளில் வர்த்தகர்கள் அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளும் இடங்களில் தங்களை பரிசோதித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளதோடு, எமது மக்களை பாதுகாப்பதற்கு அனைத்து வர்த்தகர்களையும் பூரண ஒத்துழைப்பு வழங்கியுதவுமாறும் கேட்டுக்கொள்வதாக கிளிநொச்சி நகர வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *