கொழும்பில் உள்ள மருந்தகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கனைத் தவிர அனைத்து கடைகளையும் சில நாட்களுக்கு மூடுமாறு கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு செய்வதால் கொழும்புக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
இதனால் அவர்களின் குடும்பங்கள் மற்றும் பிற சமூகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவலால் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக சமூகம் தமக்கு ஏற்படும் இழப்புகளை புறக்கணித்து, தாமாக முன்வந்து கடைகளை மூடி, கொரானாவை ஒழிப்பதில் பங்களித்தமைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட தரவுகளில் மேல் மாகாணத்தில் பல்வேறு வைரஸ் விகாரங்கள் உருவாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொழும்பு நகருக்கான அணுகல் மற்றும் தேவையற்ற பயணத்தை கட்டுப்படுத்துமாறும் ரோஸி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்..