ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கைகளில் விழுந்ததன் பிற்பாடு இந்தியா ஒரு பாரிய முற்றுகைக்குள் உட்படதான தோற்றப்பாடு காணப்படுகிறது. தலிபான்களின் வருகையை பாகிஸ்தான் வரவேற்றிருப்பதுடன் சீனாவும் அவர்களுடன் கைகோர்த்து பயணிக்க தயாராக இருக்கிறது. ஏற்கனவே சீனாவானது பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம்,பூட்டான், இலங்கை, போன்ற இடங்களில் தனது கால்களைப் பதித்திருக்கும் சந்தர்ப்பத்தில் தற்சமயம் ஆப்கானிஸ்தானிலும் தனது கால்களை பத்தித்திருக்கிறது. இந்தியாவுக்கு தோழனாக இருந்த அமெரிக்கா முற்றுமுழுதாக ஆப்கானிஸ்தானை விட்டு விலகியிருப்பதானது இந்தியாவை தனிமைப்படுத்திவிட்ட ஒரு சூழ்நிலையை உருவாகியிருக்கிறது. உலகில் அதிக முஸ்லிம் சனத்தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் இரண்டாம் இடத்தை பெற்றிருக்கும் நாடான இந்தியாவில் முஸ்லிம் தீவிரவாதம் பலதடவை தலைதூக்கி யிருந்தது யாவரும்அறிந்ததே. இதைவிட காஷ்மீரில் தனிநாடுகோரி நடந்து வரும் போராட்டம் முஸ்லீம் தீவிரவாதமாக இந்தியாவால்
பிரச்சாரப்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதோடு பாகிஸ்தான் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு முழுமையான ஆதரவை அளித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டிவருகிறது. இந்தியா ஏற்கெனவே பல முதலீடுகளையும், அபிவிருத்தித்திட்டங்களையும் ஆப்கானிஸ்தானில் செய்துள்ளது.
குறிப்பாக அணை கட்டுக்கள், பெருந்தெருக்கள், மற்றும், பாராளுமன்ற கட்டிடத் தொகுதி, கல்விசார் நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்பச்சாலைகள் என பல விடயங்களில் ஆப்கானிஸ்தானில் பல முதலீடுகளை செய்திருக்கிறது.இருந்தும் இன்று இவை அனைத்தும் விழலுக்கிறைத்த நீர் போலாகிவிட்டது. இந்தியாவுக்கு இது ஒரு போதாத காலம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இந்தியாவைச்சுற்றி இருக்கும் நாடுகள் அனைத்துமே சீனாவின் வசப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில்இந்தியாவை சுற்றி ஒரு முழுமையான முற்றுகையை சீனாஇட்டிருப்பதாகவேகருதவேண்டியிருக்கிறது.இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்ட குறைபாடா ? இல்லை இந்தியாவுக்கான போதாத காலமா ? என எண்ணத் தோன்றுகிறது.