முதல் அலை மற்றும் இரண்டாவது அலை பற்றி தற்பெருமை காட்டி இப்போது மரணத்தை நோக்கி செல்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
நாம் அனைவரும் வாழ்க்கை திசையில் மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். தடுப்பூசி பொறிமுறை வெற்றிகரமாக இருந்ததாக ஜனாதிபதி சொல்ல முயற்சித்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தடுப்பூசி விவகாரம் வெற்றிகரமாக இல்லை. தடுப்பூசி போடப்பட்ட முதல் டோஸுக்கு இடையிலான இடைவெளி சுமார் 32 சதவீதமாகவுள்ளது. நம் நாட்டில் தடுப்பூசி அறிவியல் பூர்வமாக செய்யப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.
நாடு தொடர்ச்சியாக மூடப்பட்டால் தியாகம் செய்ய தயாராக இருக்குமாறு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறுகிறார். நாடு மூடப்படும் போது பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது. அவர் சம்பளம் கொடுக்க முடியாது என்றவாறு தான் கூறினார்.
ஆடைத் தொழில் துறையால் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைப்பதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.
அந்த நேரத்தில் ஜனாதிபதி பிரேமதாஸ ஆடைத் தொழிற்சாலையை அறிமுகப்படுத்தியபோது, சிரித்தவர்கள் இன்று அத் தொழில்துறை ஒரு முதலீடாக இருந்து, நமது பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொடுப்பதாக ஜனாதிபதியின் உரையிலிருந்தே தெரிகிறது.
ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் 99வீதமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்களில் 85 வீதமானோர் கோட்டாபய ராஜபக்சவுக்கே வாக்களித்தனர்.
எனவே, எதற்காக ஆசிரியர்கள் போராடுகின்றனர் என்பது தொடர்பில் அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாம் நாட்டை ஆளவில்லை. ஆனாலும் நாம்தான் ஆட்சியாளர்கள் என நினைத்துக்கொண்டே ஆளுந்தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதேவேளை, நாட்டின் உண்மை நிலைவரத்தை எடுத்துரைப்பதற்கு சுகாதார அமைச்சராக பதவி வகித்த பவித்ரா முயற்சித்துள்ளார்.
ஆனால் அவர் தடுக்கப்பட்டுள்ளார். நிலைமை மோசம், நாட்டை முடக்குமாறே அவர் வேண்டுகோள் விடுக்க சென்றுள்ளார். அவரின் கோரிக்கை செவிமடுக்கப்படவில்லை.
இவ்வாறு தன்னிச்சையாக செயற்படும் அரசு, பழியை எதிரணி மீது சுமத்துவது நகைப்புக்குரிய விடயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.