அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆசிரியர் , அதிபர் சங்கங்கள் பலவற்றுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையின் உப குழு உறுப்பினர்கள் நிதி அமைச்சரை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்நிலையில், இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி 41 வது நாளாகவும் ஆசிரியர் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றன.
எவ்வாறாயினும், அமைச்சரவையின் ஊடாக தமக்கு உரிய தீர்வொன்றை முன்வைக்காத பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.