இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளில் முன்னிலையாகி தனது பாரிய பங்களிப்பை வழங்கியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா, கொரோனா தொற்றினால் இன்று உயிரிழந்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் அவரது துணைவியாரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்தனர். துணைவியர் கௌரிஷங்கரி தவராசா, அவசர சிகிச்சைப் பிரிவிலும், சட்டத்தரணி தவராசா விடுதியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்திருந்தனர்.
இந்த நிலையில் கௌரிஷங்கரி இன்று, சிகிச்சை பலனின்றி தனது 63 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மற்றும் முக்கியமான வழக்குகள் பலவற்றிற்கு முன்னிலையாகி வாதிட்டு நியாயத்தை பெற்றுக்கொடுத்து நீதித்துறையில் கௌரிஷங்கரி பிரபல்யமடைந்தவர் என்பதுடன், இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் சிலகாலம் செயற்பட்டதுடன், அக்கட்சியின் முக்கிய வழக்குகளில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.