ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் விலை பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை வெளியாகியிருந்த தகவல்களில் 2021 ஐபோன் மாடல்கள் விலை கடந்த ஆண்டை போன்றே நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 13 சீரிஸ் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் சிப்செட் மற்றும் இதர உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஐபோன் 13 சீரிஸ் விலை அதிகமாக நிர்ணயிக்கப்படலாம். ஆப்பிள் நிறுவனத்திற்கு சிப்செட் உற்பத்தி செய்து கொடுக்கும் நிறுவனங்கள் முன்பு நிர்ணயிக்கப்பட்டதை விட 20 சதவீதம் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க இருப்பதால், ஐபோன் 13 சீரிஸ் விலையும் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.