தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றுவதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அப்போதைய அதிபர் அஷ்ரப் கனியும் இறுதியாக ஜூலை 23ஆம் திகதி சுமார் 14 நிமிடங்கள் தொலைபேசியில் நடத்திய உரையாடல்கள் குறித்து தற்போது செய்தி வெளிவந்துள்ளது. அப்போது ஆப்கானிஸ்தானில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தன்னிடம் ஒரு பிளான் இருப்பதாக கனி வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். அந்த பிளானுக்கு உதவி செய்வதாக பைடனும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“உங்களிடம் திறமையான இராணுவம் இருக்கிறது, 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் தாலிபான்களை எதிர்க்க 3,00,000 படைகளை கொண்டிருக்கிறது ஆப்கானிஸ்தான். எனவே போரை நடத்த அவர்களிடம் முழு சக்தியும் உள்ளது.. ஆனால் தாலிபான்களுக்கு எதிரான போர் சிறப்பாக நடக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.. புதிய இராணுவ திட்டம் இருப்பதாக ஆப்கனின் முக்கிய தலைவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கலாம். இது கண்டிப்பாக ஒரு தாக்கத்தை உருவாக்கும்..
உங்கள் அரசை நீட்டிக்க செய்ய, அரசியல் பொருளாதார, தூதரக ரீதியாக கடுமையான போரை தொடர்ந்து நடத்த போகிறோம்” என்று பைடன் உறுதியளித்துள்ளார். இதற்கு பிறகுதான் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன்பு, அப்போதைய அதிபர் கனி அங்கிருந்து உடனடியாக வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.