ஆவணங்கள் அழிந்தது உண்மையே! ஒப்புக்கொண்டது அரசாங்கம்

ஆவணங்கள் அழிந்தது உண்மையே! ஒப்புக்கொண்டது அரசாங்கம்

Government Cloud எனப்படும் இலங்கை அரசாங்கத்தின் தரவுத்தளத்தில் இருந்த 5,623 அத்தாட்சி ஆவணங்கள் அழிவடைந்துள்ளதை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு நேற்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியது.

குறித்த தரவுகளின் பாதுகாப்பு தொடர்பில் போதுமான அளவு கரிசனை செலுத்தப்பட்டிருக்கவில்லை என்பதை அவதானிக்க முடிந்ததாகவும் Backup ஒன்றுக்கான ஏற்பாடுகள் இருக்கவில்லை எனவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

5,623 கோப்புகள், சார்பு ஆவணங்கள் மற்றும் அத்தாட்சி ஆவணங்கள் என்பனவே அழிவடைந்துள்ளதாகவும் COVID தரவுகள் Manual ஆக உள்ளடக்கப்படுவதால், அவை அழியவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க குறிப்பிட்டார்.

Government Cloud எனப்படுகின்ற இலங்கை அரசாங்கத்தின் தரவுத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் தன்னியக்க தரவுக்கட்டமைப்பு கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி அழிவடைந்தது.இரகசியத்தன்மை பேணப்பட வேண்டிய இந்த தரவுகள் அழிவடைந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *