பிரித்தானியாவில் கொரோனா தாக்கத்தால் தேசிய மருத்துவ சேவை எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய வரி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா தாக்கம் முடிவுக்கு வரும்போது புதிய வரிகள் அறிவிக்கபடலாம் என சாமானியர் கூட எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்த வரி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக என் எச் எஸ் எனப்படும் தேசிய மருத்துவ சேவை எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வகையில் இந்தப் புதிய வரி இன்று பிரதமர் பொறிஸ் ஜோன்சனால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்பு வரி என்ற அடையாளத்தைப்பெற்றுள்ள இந்தப் புதியவரி என் ஐ ஒதுக்கம் எனப்படும் தேசிய காப்பீட்டு வரியில் 1.25 உயர்வு மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் வணிக நிறுவங்களின் பங்குகள் மூலம் வருமானம் பெறுவோருக்கும் தனியான வரி அறவீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலமாக தேசிய மருத்துவ சேவை உட்பட்ட அத்தியாவரிய முன்னணி சேவைகளுக்காக மூன்று ஆண்டுகளில் சுமார் 36 பில்லியன பவுண்ஸ் திரட்ட அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.
இதுபோலவே இருபதாயிரம் பவுண்சுக்கு குறைவான சொத்துக்களைக் கொண்டவர்களுக்குரிய என். எச.;எஸ் மருத்துவ பராமரிப்புச் செலவுமுழுமையாக அரசால் ஈடுகட்டப்படும் அதே நேரத்தில், 100,000 பவுண்சுக்கு குறைவான சொத்துக்களைக் கொண்டவர்களுக்கு அவர்களின் மருத்துவ பராமரிப்புச் செலவுக்கு மானியம் வழங்கப்படும் என் எச் எஸ் எனப்படும் தேசிய மருத்துவ சேவை வரலாற்றில் இது மிகப்பெரிய செலவீன ஈடுகட்டல் திட்டம் என வர்ணித்துள்ள பொறிஸ் ஜோன்சன், என் எச் எஸ் முழுமையாக முறிவடையும் பேரழிவில் இருந்து காத்துக்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அரசாங்கத்தின் இந்த நகர்வை விமர்சனம் செய்துள்ள தொழிற்கட்சி தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மர், பொறிஸ் ஜோன்சனின் இந்த முன்மொழிவுகளை ரணங்களின் இடைவெளிகளில் பிளாஸ்டர்’ ஒட்டுவதற்கு சமனான நகர்வு என வர்ணித்துள்ளார். ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடஅயர்லாந்து ஆகியன தனியான மருத்துவ சேவை ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதால், இந்த மாற்றங்கள் பிரித்தானியாவுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவித்துள்ள ஜோன்சன், வரியின் விளைவாக ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடஅயர்லாந்து ஆகிய பிராந்தித்துக்கும் வருடத்திற்கு 2.2 பில்லியன் கூடுதல் நிதிவழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.