தோஹாவில் அமெரிக்காவும் தாங்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி, ஆப்கன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜுதீன் ஹக்கானியை அமெரிக்கா இன்னும் தீவிரவாத பட்டியலில் தொடர்ந்து வைத்துள்ளதாக தாலிபன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காபூலில் இருந்து அமெரிக்கர்கள் உள்ளிட்ட 200 பேருடன் முதலாவது சர்வதேச பயணிகள் விமானம் கத்தாருக்கு புறப்படும் சில மணி நேரங்களுக்கு முன்னர், ஆப்கன் அரசு சார்பில், அமெரிக்காவை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜுதீன் ஹக்கானி, கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனில் அமெரிக்க படைகள் மீது தாக்குதல்களை நடத்தி வந்தவர் என கூறி அவரை தேடப்படும் தீவிரவாதியாக FBI அறிவித்துள்ளது. அவரது தலைக்கு சுமார் 37 கோடி ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து தாலிபன்களின் பல கபினட் அமைச்சர்களை ஐநா தனது கறுப்புப்பட்டியலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது