இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான் கேட்பன்சியில் இருந்து விராட் கோலி விரைவில் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கான அனைத்து போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. விரைவில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. அந்த தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகவுள்ளதாக கூறப்படுகிறது. பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் விராட் கோலி இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
அதையடுத்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோஹித் ஷர்மாவுக்கு வழக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்ந்து நீடிக்கவுள்ளார். இந்திய அணி விராட் கோலி தலைமையில் இதுவரை 95 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 65-ல் வெற்றியும் 27-ல் தோல்வியும் அடைந்துள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2 போட்டிகளில் முடிவு இல்லை.