நாட்டில் தற்போது புகையிரதங்களை இயக்குவதற்கு  டீசல்  தட்டுப்பாடு  -முஜிபுர் ரகுமான்

நாட்டில் தற்போது புகையிரதங்களை இயக்குவதற்கு டீசல் தட்டுப்பாடு -முஜிபுர் ரகுமான்

தற்போது நாடு முழுமையாகத் திறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மாத்திரம் இம்மாதம் 31 ஆம் திகதி வரையிலும் புகையிரத சேவை மறு அறிவித்தல் வரையிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இரண்டுமோசடிகள் தொடர்பான விடங்களை வெளிப்படுத்தவுள்ளோம் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான் எரிபொருள் நிறுவனங்கள் தொடர் பாக தற்போது பல கருத்துகள் வெளியாகியுள்ளன.எரிபொருட்கள் இன்னும் எந்தனை நாட்களுக்கு இருப்பில் இருக்கும் என்றும் கையிருப்பில் இருக்கும் இருப்பு இலங்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமா போன்ற காரணங்கள் இன்னும் தெரிய வரவில்லை

குறித்த விடயம் தொடர்பாக நிதியமைச்சர் தலைமையில் LNG தொடர்பாகக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினை குறித்தும் ஆராயவுள்ளோம்.இது தொடர்பாக அதிக மோசடி இடம்பெற்றுள்ளமை எங்களுக்குத் தெரியவந்துள்ளது.எரிபொருள் அமைச்சர் உதய கம்பன்பில அமைச்சரவைக்குப் பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் உலகநாடுகளுக்குச் சென்று கடன் உதவி கேட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கனிய வளம் நிறுவனத்துக்குக் கடனை பெறுவதற்காக எரிபொருள் அமைச்சர் உதய கம்பன்பில வெளிநாடுகளுக்குப் பயணத்தை மேற்கொண்டார். 2.5 பில்லியன் டொலர் வழங்க வெளிநாடு ஒன்று ஒப்புக்கொண்டுள்ளதாக அண்மையில் அமைச்சரவையில் அவர் தெரிவித்தார். குறித்த கடன் 100க்கு 3 சதவீதம் வரி சலுகையில் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.குறித்த கடன் செலுத்தவேண்டிய முழு கடன் தொகையில் தேசிய நிறுவனம் ஒன்றுக்கு நூற்றுக்கு 7 சதவீதம் செலுத்தவேண்டும் என்றும் பெற்றுக்கொள்ளும் கடனை 12 வருடத்திற்குள் செலுத்தி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் அமைச்சர் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யத் தீர்மானித்துள்ளதாக கம்பன்பில அமைச்சரவையில் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கனிய வள நிறுவனத்திற்காக அவர் கேட்ட கடன் தொலை 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும் குறித்த ஒப்பந்ததிற்கு அமைச்சரவையில் அனுமதி கேட்டுள்ளார் இதில் பரிய மோசடி நிலவுதாக சந்தேகம் எழுந்துள்ளது.

PLS அமெரிக்க நிறுவனத்துடன் கடன் பெறவுள்ளமை தெரியவந்துள்ளது.
தேசிய நிறுவம் ஒன்றும் இதில் இணைத்துள்ளது என்றும் அமெரிக்க நிறுவனத்தில் பெறப்படும் 2.5 பில்லியன் கடன் தொலையில் நூற்றுக்கு 7 சதவீதம் வழங்கவேண்டும் என குறித்த அமைச்சரவை பத்திரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.நூற்றுக்கு 7 சதவீம் வழங்கினால் 2.5அந்த கடன் தொகையில் செலுத்தவேண்டும் 100க்கு 100 விதம் 12 வருடத்துக்குள் கடன் தொகையை முழுமையாக வழங்க வேண்டு என்றும் தேசிய நிறுவனத்திற்கும் வழங்கப்படு தொகையையும் இணைத்து வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற வெளிப்பாடுகளின் மூலம் ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள நிறுவனம் என தெரியவந்துள்ளது.குறித்த நிறுவனத்திற்கு175 டொலர் மில்லியன் செலுத்த அமைச்சர் தீர்மானிதுள்ளார். ஆனால் குறித்த நிறுவனம் கொடுக்கல் வாங்கல் செய்தமை தொடர்பான எந்த ஆதாரங்களும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாய் படி 350 மில்லியன் தேசிய நிறுவனத்திற்கு வழங்கவுள்ளாக அவர் அமைச்சரவையில் அனுமதி கேட்டுள்ளார். குறித்த நபர் யார்? எதற்காக அவ்வளவு பாரிய தொகையைச் செலுத்த வேண்டும் போன்ற விடயங்களில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் இதில் பாரிய மோசடி இடம்பெறுவதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.அதுமாத்திரமன்றி அமெரிக்க நிறுவனமொன்றிடமிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி கோரி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப்பத்திரம், மிகப்பெரிய நிதிமோசடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

நூற்றுக்கு 3 சதவீதம் செலுத்த வேண்டும் என்றும் அதிக கடன்களைப் பெற்றால் நூற்று 2 சதவீதமாகும் குறைவாக வரிப்பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை தான் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். நூற்றுக்கு 3 சதவீதம் செலுத்த வேண்டும் என்றும் கூறுவது அதிகப் பணமாகும் என அவர் தெரிவித்துள்ளார். இதன் தொகை பிரகாரம் அதிக தொகை வரிப் பணத்தைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் தெரிவித்துள்ளார். குறித்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடக எரிசக்தி அமைச்சர் பாரிய மோசடியில் ஈட்டுப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் புகையிரதங் களை இயக்குவதற்கு அவசியமான டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை மறைப்பதற்காகவே அரசாங்கம் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தையும் புகையிரத சேவையையும் இடைநிறுத்தி ஒக்டோபர் 31 ஆம் திகதிவரை பயணக்கட்டுபாடுகளை நீடித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் சுட்டிக்காட்டியுள்ளார்.அரசாங்கத்தின் நிறுவனத்தின் அதிகாரிகள் தூர இடங்களிலிருந்து கொழும்புக்கு பணிபுரிவதற்காக வருகை தருகின்றனர் என்றும் அவர்களை பணிக்கு வரவேண்டாம் என எவரும் அறிவிக்கவில்லை என்றும் அரசாங்க நிறுவத்தின் முகாமையாளர்கள், அதிகாரிகள் அமைச்சரவையில் அரசாங்க அதிகாரிகள் அவர்களைச் சேவையில் இணைத்துக்கொள்ளவேண்டாம் என எவரும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசாங்கம் மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தைத் தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல் படுத்தியுள்ளன என்றும் 31 ஆம் திகதிவரை நீடித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் புகையிரதங்களை இயக்குவதற்கு அவசியமான டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அதனை மறைப்பதற்காகவே அரசாங்கம் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தையும் புகையிரத சேவையையும் இடைநிறுத்தி ஒக்டோபர் 31 ஆம் திகதிவரை பயணக்கட்டுபாடுகளை நீடித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் சுட்டிக்காட்டியுள்ளார். இரசாயன உர இறக்குமதி தடை செய்துள்ளது என்றும் இந்நாட்டில் விவசாயிகள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உருளைக்கிழங்கு, பீட்ரூட், தேயிலை , போஞ்சி ஆகிய பயிர்ச்செய்கை செய்யும் விவசாயிகள் ஏனைய பயிர்கள் செய்கை செய்யும் விவசாயிகள் தற்போது வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள் என்றும் அவர்களுக்கு உரங்கள், கிருமிநாசினிகள் போன்ற தட்டுப்பாடுகள் நிலவுகின்றன இவற்றை வழங்குமாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நிராகரித்துவிட்ட தற்போது உரங்கள், கிருமிநாசினிகள் , பீடை நாசினிகளை அரசாங்கம் இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளது என்றும் . இந்த அரசாங்கம் மோசடியைச் செய்யத் தூண்டுவதாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தும் அதன்பிறகு விலைக்கட்டு பாடுகளை தளர்த்தி வி்டு பொருட்களின் விலையை அதிகரிக்கும் அதன்பின்னர் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அத்தோடு தங்கள் விருப்பமானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றனர் , பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என்றும் இது தான் கடந்த சில நாட்களாக இடம்பெற்றது என்றும் சீனி, பால்மா , எரிபொருள், அரிசி ஆகிய பொருட்களுக்கு இந்த நிலைமை தான் ஏற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரிசியின் விலை 180 ரூபாயால் உயர்ந்துள்ளது மேலும் மருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போது இதே நிலை ஏற்பட்டாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது உரம், கிருமி நாசினி,பீடை நாசினிகளுக்கும் அரசாங்கம் இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த இரண்டு நிறுவனங்களும் கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு உதவி செய்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *