சிங்கள மக்களை அத்துமீறி வாகரைக்குள் குடியேற்ற முயற்சி செய்வதவதை எதிர்த்த மக்கள்

சிங்கள மக்களை அத்துமீறி வாகரைக்குள் குடியேற்ற முயற்சி செய்வதவதை எதிர்த்த மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி கிராமசேவையாளர் பிரிவில் காராமுனை பகுதியில் சிங்கள மக்களை குடியேற்ற முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு எதிராக அம்மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். 
இந்தப் பகுதியில் 1982 ஆம் ஆண்டுக்கு முன்பாக வசித்ததாக தெரிவிக்கப்படும் சிங்கள மக்களின் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கான காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கை நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன இந்தநிலையில் அப்பகுதிக்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தலைமையிலான குழுவினர் இந்த செயற்பாடுகள் தொடர்பில் தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர் இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் அரியநேந்திரன் சிறிநேசன் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் திரு சரவணபவன் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ் சர்வானந்தன் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் இந்நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்று தங்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *