பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வெள்ளிக்கிழமை வனஜீவராசிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் சி பி ரத்னாயக்க தலைமையில் இடம்பெற்றது இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்ட எம்.பி ஸ்ரீதரன் வன்னிமாவட்ட எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி இரா. சாணக்கியன் ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர்.
இக்கூட்டத்தில் திட்டமிட்டபடி விடயங்கள் முன்னெடுக்க படாமல் வேறு விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட போது அதை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னால் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற காணி அபகரிப்பு கிளிநொச்சி ஆனைவிழுந்தான் ஜெயபுரம் பகுதியின் காணி அபகரிப்பு பற்றி கவனத்திற்கு கொண்டு வந்த போது புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மாயாதுன்ன சிந்தக அமல் ஸ்ரீதரன் ஐ பார்த்து புலி புலி என கூச்சலிட்டு அவரின் கருத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்.மாயாதுன்னுடைய புலி கூச்சலுக்கு எதிர்ப்பை வெளியிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள்