நாட்டில் பருப்பு அல்லது அரிசி விலைகளை கவனிப்பதற்காகவா மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்,அதில் எந்தவித பயனும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி இதனை உடுபெத்தாவ முன்னேஹேபொல விவசாய பண்ணையை பார்வையிட்ட பின்னர் இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கமும் கூட கம தொழிலுக்கு சேதனப்பசளைகளை பயன்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது.இறுதியில் எந்த தலைவரும் இவ்வாறான தீர்மானத்தை எடுக்கவில்லை.மக்கள் என்னை பருப்பு விலை அரிசி விலையை கவனிப்பதற்கு என்றால் அதில் எந்தவித பயனும் இல்லை.
நாட்டில் இதனை விட பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.முக்கியமாக கம தொழிலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.நான் பதவிக்கு வந்த நாளிலிருந்து உழவர்களின் வாழ்க்கைநிலை உயர்த்துவதற்காக பசளைகளை இலவசமாக வழங்கினேன்,நெல்லுக்கான உறுதியான விலையை நாங்கள் வழங்கினோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.