துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ரீ20 உலகக்கிண்ணத்தின் பதினாறாவது ஆட்டத்தில் பரம எதிரி களை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான முதல் உலகக்கிண்ண வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்துள்ளது.
நேற்று முன்தினம் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தனர் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு விராட் கோலி இருவரும் சொல்லும் அளவிற்கு கைகொடுக்கவில்லை விராட் கோலி மாத்திரம் 49 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார் இது வண்டி சர்வதேசப் போட்டிகளில் விராட் கோலியின் 29வது அரை சதமாகும் இறுதியாக இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களைப் பெற்றனர். இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 18-வது ஓவரில் 152 என்ற இலக்கை அடைந்து இந்தியாவுடனான உலகக்கிண்ணப் பதிவுகள் உடைத்து ரீ20 போட்டிகளில் முதல் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.