ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது அதில் ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை உருவாக்குதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் வர்த்தமானி அறிவித்தல் (2251/30) நேற்று வெளியிடப்பட்டது.இதில் ஞானசார தேரர், பேராசிரியர் தயானந்த பண்டா எஸ்குவேர், பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேதா சிறிவர்தன, என்.ஜி. சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன, சட்டத்தரணி சஞ்சய மரம்பே, சட்டத்தரணி எரந்த நவரத்தின, பானி வெவல, காலி உலமா சபையின் மௌலவி மொஹமட், மொஹமட் இந்திகாப் விரிவுரையாளர், கலீல் ரகுமான் மற்றும் அஸீஸ் நிசார்தீன் உட்பட 13 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.செயலணியின் தலைவராக ஞானசார தேரரும் மேற்படி செயலணியின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்கவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.அத்தகைய விசாரணைகளை மேற்கொள்வதற்கும் அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கும் செயலணிக்கு ஜனாதிபதி அதிகாரம் வழங்குகிறார்.மேலும், குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தமக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும், 2022 பெப்ரவரி 28 அல்லது அதற்கு முன்னர் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுக்கு பணித்தார்.