உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மூடி மறைக்கப் படுவதாக யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,பொலிஸாரினால் செய்யக்கூடிய நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. அனைத்து விசாரணைகளும் பூர்த்தி செய்யப்பட்டு சட்ட மா அதிபரிடம் அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஐந்து மேல் நீதிமன்றங்களில் 9 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான திட்டத்தை வகுத்த 24 தீவிரவாதிகளுக்கு எதிராக ஏற்கனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங் கிய குழுவொன்று நாள் தோறும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் அனைத்து நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டு விட்டன, இனி சட்ட மா அதிபரின் கைகளிலேயே தங்கியுள்ளது-என்றார்.