எதிர்வரும் 03 வருடங்களில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டங்களை ஆராய்ந்து நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் இணைந்து அவற்றை விரைவாக திருத்தம் செய்யவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரிதெரிவித்தார். சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மதவாச்சி மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்கள், கஹட்டகஸ்திகிலிய மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்கள் ஆகியவை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.
செயற்திறன் மற்றும் பயனுள்ள வகையில் நீதியை நிலைநாட்டும் பொறிமுறையொன்றை உருவாக்குவதன் மூலம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி ஆறு அம்ச திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறார்.
தேவைக்கேற்ப நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அறிக்கையிடும் நீதிபதி பதவியை நிறுவுதல்,விசாரணைக்கு முந்திய நீதிமன்றங்கள் மற்றும் சிறு உரிமை நீதிமன்றங்களை நிறுவுவதன் மூலம் நீதித்துறையில் தேவையான கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் மேற்கொள்ளல், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு மூன்றாண்டு கால திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குதல், சட்ட வல்லுநர்களின் உதவியுடன் சட்ட கட்டமைப்பை புனரமைப்பதற்கான பாரிய திட்டம் மற்றும் மாற்று பிணக்க பொறுமுறை ஒன்றை உருவாக்குதல் என்பனவே அவையாகும். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் முறைமைய விஸ்தரிப்பதற்காக நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதை போன்றே காலவதியான சட்டங்களை சீர்திருத்துவதன் மூலம் வழக்குகளை விரைவுபடுத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.