ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரினால் மேற்கொள்ளப்பட்ட இரட்டை கொலை தொடர்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தாலி வெரோன் பிராந்தியத்தில் வீடு ஒன்றில் இரண்டு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துக் கொண்டமைக்கான காரணம் வெளியாகி உள்ளது.
34 வயதான சசித்ரா நிசன்ஸலா என்ற பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த பாதக செயலை செய்த நிலையில் நேற்று முன் தினம் ஆற்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.
குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசி மற்றும் தனிப்பட்ட தகவல்கள் ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னரே அவரது சடலம் அடையாளம் காணப்பட்டது.
அவர் தனது பிள்ளைகளின் தலையணை கொண்டு மூச்சை இறுக்கி கொலை செய்துள்ளார் என விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு இல்லம் ஒன்றில் வசித்து வந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இல்லத்தின் அதிகாரிகளிடம் தனது இரண்டு மகள்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறிய பெண் காய்ச்சல் மருந்து பெற்று சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் அவர் தனது பிள்ளைகளை கொலை செய்து விட்டு, குளியலறை ஜன்னல் வழியாக தப்பிச் சென்று ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
போதைக்கு அடிமையாகிய கணவரின் தொல்லைகள் காரணமாக அவரை விட்டு பிரிந்த வாழ்ந்து வந்துள்ளார். எனினும் தனது கணவன் பிள்ளைகளை பார்ப்பதற்கும், நெருக்கமாக பழகுவதற்கும் முயற்சித்துள்ளார்.
அத்துடன் பிள்ளைகளை தன்னுடன் அழைத்து செல்ல முயற்சித்துள்ளார். பிள்ளைகளை கணவனுடன் அனுப்புவதற்கு பதிலாக அவர்களை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக் கொள்வதாக அவர் பலமுறை கூறிய நிலையில் திடீரென இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
எனினும் தனது மனைவிக்கு மனநலம் பாதித்து விட்டதாக கணவன் விசாரணை மேற்கொண்ட பொலிஸாரிடம் கூறியுள்ளார்.