ஒரே நாளில் 1,000 மேற்ப்பட்ட இறப்பு: ஊரடங்கை அமுல் படுத்திய பிரபல ஐரோப்பிய நகரம்

ஒரே நாளில் 1,000 மேற்ப்பட்ட இறப்பு: ஊரடங்கை அமுல் படுத்திய பிரபல ஐரோப்பிய நகரம்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா பரவல் உச்சத்தில் சென்றதை அடுத்து மீண்டும் ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவருவதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து வியாழக்கிழமை முதல் 11 நாட்களுக்கு அத்தியாவசியமற்ற சேவைகளை நிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுது. கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசியை முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு ரஷ்யா.

ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதத்தில் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது ரஷ்யா. இதனால், கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருவதாகவே தெரிய வந்துள்ளது.

ஐரோப்பாவில் கொரோனா பரவலால் தத்தளித்துவரும் நாடுகளில் தற்போது ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. வியாழக்கிழமை ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 1,159 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.

மேலும், 40,096 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே தலைநகர் மாஸ்கோவில் நவம்பர் 7ம் திகதி வரையில் அத்தியாவசியமற்ற சேவைகளை நிறுத்துவதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் இறப்பும் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வந்தாலும், ரஷ்ய மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை எதிர்த்தே வருகின்றனர்.

வியாழக்கிழமை வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்த மக்கள் தொகையில் இதுவரை 32 சதவீத மக்கள் மட்டுமே முழிமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *