சீனாவில் உள்ள மம்மிகளின் DNA ஆய்வு முடிவுற்ற பின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சீன மம்மிகள் சுமார் 4000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. இவை பண்டைய பனி யுக ஆசிய மக்களின் வழித்தோன்றலில் வந்த வடக்கு யூரேசிய குழுவிற்கு சொந்தமானது என்று ம் கூறியது. இந்த மம்மிகள் அனைத்தும் சைபீரியா, அமெரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. இந்த வேட்டையாடும் மக்கள் கூட்டத்தின் தடயங்கள் தற்போதைய மக்கள் தொகையின் மரபணுக்களில் ஓரளவு மட்டுமே வாழ்வதாக தெரியவந்துள்ளது. இது குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் இணைப் பேராசிரியரான கிறிஸ்டினா வாரின்றின் தெரிவித்ததாவது, மம்மிகள் கண்டறியப்பட்டத்தில் இருந்து அதில் கிடைக்கப்பட்ட தகவல்களானது விஞ்ஞானிகளை மட்டுமின்றி பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளதாக தகவல் அவர் தெரிவித்துள்ளார்.