கொரோனா வைரஸின் புதிய திரிபு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கொரோனா வைரஸின் புதிய திரிபு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் உடைக்கக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

A.30 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வகை வைரஸ் குறித்து தற்போது உலகின் பல நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

இலங்கையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண  (Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிப்பதால் வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் அனைத்து தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் உடைக்கக்கூடிய புதிய தடுப்பூசிகளைத் தேடுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இது பரவினால் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவும் அதனால் உலகத்தின் கவனம் அதன் மீது குவிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, இதுதொடர்பில் நாமும் அவதானம் செலுத்த வேண்டும்.

கொரோனா முற்றாக நிறைவுக்கு வந்துவிட்டது என்று எண்ணி மக்கள் செயற்பட்டால் மேலும் நான்கே வாரங்களில் இந்தத் திரிபின் பிரதிகூலத்தை அனுபவிக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளாா்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *