இலங்கையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.
அதற்கமைய, நாளை முதல் பயணிங்களின் ஆசங்களின் எண்ணிக்கைக்கேற்ப மாத்திரமே பயணிகளை பேருந்தில் அழைத்து செல்ல முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ரயிலில் பயணிகளை அழைத்து செல்வது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பு விடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்துகளின் பயணங்கள் அனைத்தும் இன்று முதல் அல்லது நாளை முதல் முழுமையாக வழமைக்கு திரும்பும் என அறிவிக்க்பட்டது. எனினும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கமைய மாத்திரமே பயணிகளை அழைத்த செல்ல வேண்டும் என்ற சட்டத்திற்கமையவே பேருந்துகள் இயங்கும்.
திங்கட்கிழமை முதல் 152 முறை ரயில் பயணிகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.