சீன உரக் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது சட்டவிரோதமானதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் துறைமுக பிரதானி கேப்டன் கே.எம்.நிர்மால் பீ சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சீன சேதன உரத்தை தாங்கிய ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) என்ற கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
தீங்கு இழைக்காத நோக்கில் எமது கடற்பரப்பினை ஊடறுத்து மேற்கொள்ளும் பயணங்களை சட்டவிரோதமானது என அடையாளப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினர் நாட்டின் கடற் பகுதியை கண்காணித்து வருவதாகவும், சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து கண்காணிப்பு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் இலங்கைகுள் பிரவேசித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட போதிலும் அதிகாரபூர்வமாக இலங்கை துறைமுகத்துடன் குறித்த கப்பல் தொடர்புகளை ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.