ஐ.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 12 இலங்கையர்கள் கைது

ஐ.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 12 இலங்கையர்கள் கைது

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் 20 இலங்கையர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.ஸ் தீவிரவாத சந்தேக நபர் ஒருவரின் செல்லிடப்பேசியில் 702 இலங்கையர்களின் தொடர்பு இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் இவ்வாறு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு பேணிய குற்றச்சாட்டின் பேரில் சுமார் 20 பேரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த தொலைபேசி இலக்க விவகாரத்தின் அடிப்படையில் 20 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஐஎஸ் கொள்கைகளை பின்பற்றுபவர்களா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு பேணியவர்களா என்பது பற்றி தற்போதைக்கு கூற முடியாது எனவும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்தியரின் செல்லிடப்பேசியில் காணப்பட்ட 702 இலங்கை தொடர்பிலக்கங்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த 12 இலங்கையர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இவர்கள் தொடர்பு வைத்திருந்தமை உறுதியாகி உள்ளது.

சந்தேக நபர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தியாவில் கைது செய்யப்பட்ட மொஹமட் மொஹிதீன் என்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்பு வைத்திருந்த இலங்கையர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்ட மொஹமட் மொஹிதீன் என்ற ஐ.எஸ் பயங்கரவாதியின் கையடக்க தொலைபேசியில் 70 பேரின் கையடக்க தொலைபேசி இலக்கங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நபர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு இந்திய உள்துறை அமைச்சு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த 70 பேரும் இலங்கையர்கள் எனவும் அவர் வட்ஸ்அப் குழுவொன்றில் இணைந்துள்ளதாகவும் அதில் பயங்கரவாதம், தொடர்பான வீடியோக்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதானியான சஹ்ரானின் வீடியேக்களும் பகிரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை பயங்கரவாத விசாரணை பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *