ரஷ்யாவில் விழுந்து நொருங்கிய பெலாரஸ் நாட்டு சரக்கு விமானம்

ரஷ்யாவில் விழுந்து நொருங்கிய பெலாரஸ் நாட்டு சரக்கு விமானம்

பெலாரஸ் நாட்டு சரக்கு விமானம் ரஷ்யாவில் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் சுகோட்கா மாகாணத்தில் இருந்து பெலாரஸ் நோக்கி திரும்பி கொண்டிருந்த ஆண்டனவ் A.N 12 ரக விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த நிலையில் வானில் வட்டமடித்தபின், இர்குட்ஸ்க் நகரில் விழுந்து நொருங்கி தீப்பிடித்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

கொட்டும் பனிமழையை பொருட்படுத்தாத தீயணைப்பு வீரர்கள் போராடி நெருப்பை அனைத்தனர்.

விமானத்தில் பயணித்த 9 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1970-களில் வடிவமைக்கப்பட்ட ஆண்டனவ் விமானங்கள் இன்னும் பயன்படுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துக்குள்ளாவதாக கூறப்படுகின்றது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *