இனவெறி குற்றச்சாட்டில் இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வௌவ்கன் Michael Vaughan பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவா் மைக்கேல் வௌவ்கன் மீது இரண்டு வீரர்கள் இனவெறி குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர்.
இதனையடுத்தே பிபிசி நிகழ்ச்சியில் இருந்து வாகன் நீக்கப்பட்டுள்ளார்.
வாகன் பிபிசி 5 லைவ் இன் ‘தி டபர்ஸ் அன்ட் வௌவ்கன் கிரிக்கெட் (BBC 5 Live’s ‘The Tuffers and Vaughan Cricket Show) நிகழ்ச்சியில் 12 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளுக்கான விசேட ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
ஆனால் 2009 ஆம் ஆண்டு யோர்க்சையர் – நொட்டிங்கம்செயாா் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னர் வௌவ்கன், தனக்கும் மற்ற வீரர்களுக்கும் எதிராக இனவெறிக் கருத்துக்களை தெரிவித்ததாக அஸீம் ரபீக் வெளியிட்ட இனவெறி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே வௌவ்கன் நீக்கப்பட்டுள்ளாா்.
எனினும், தாம் அவ்வாறான வாா்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தவில்லை என்று தாம் நம்புவதாக மைக்கேல் வௌவ்கன் தொிவித்துள்ளாா்.