லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பல குழந்தைகள் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் பிரித்தானியா தலைநகர் லண்டனின் Dulwich, துர்லோ பார்க் சாலையில் உள்ள Rosemead Preparatory பள்ளியிலே நடந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து லண்டன் தீயணைப்பு படை வெளியிட்ட அறிக்கையில், பள்ளியின் இரண்டாவது மாடியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 20 தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
இவ்விபத்தில் சிறிய காயமடைந்த பலர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர் மற்றும் பல குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்ற அனைத்து குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் குறித்த பாடசாலை கட்டிடத்தில் ஒரு முறையான சோதனையை மேற்கொண்டனர் மற்றும் அனைத்து குழந்தைகளும் ஊழியர்களும் சரியாக இருப்பதை பள்ளியுடன் உறுதிப்படுத்தினர்.குறித்த பள்ளியின் மேற்கூரை இடிந்து விழும் அபாயத்தில் இல்லை என்பதை நிபுணத்துவம் பெற்ற நகர்ப்புற தேடல் மற்றும் மீட்பு குழு (USAR) மற்றும் உபகரணங்களும் உறுதிப்படுத்த பயன்படுத்தப்பட்டது என லண்டன் தீயணைப்பு படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.