சுவிட்சர்லாந்துக்கு சட்டவிரோதமாக குடியேறிய மக்களை ஆஸ்திரியாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து 51 நாடுகளுடன் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது, இது சட்டவிரோதமாக நாட்டில் தங்கி இருக்கும் நபர்களை திரும்ப அனுப்புவதை எளிதாக்குகிறது.
இந்த ஒப்பந்தங்களில் ஆஸ்திரியா மற்றும் லீக்டென்ஸ்டைன் ஒன்று தற்போது சுவிட்சர்லாந்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
அஸ்திரியாவதுடன் எல்லை தொடர்பை கொண்டுள்ள செயின்ட் கேலன் சுமார் மாகாணத்தில், ஜூலை 1 முதல் இதுவரை 2500 பேர் சட்டவிரோதமாக நுழைந்தவர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செயின்ட் கேலன் அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது ஒரு நாளில் 60 பேர் வரை கைது செய்யப்படுகின்றனர்.
அவர்களில் மிகச் சிலரே சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோர விரும்புகிறவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தொடர்ந்து பயணம் செய்கிறார்கள்.
பலர், தங்கியிருந்த இரண்டாவது நாளிலேயே தலைமறைவாகி விடுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள்.
அதில் பலர் 2020-ல் கிரீஸுக்குச் சென்றனர். மேலும் பலர் இப்போது ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து வழியாக பிரான்ஸ் மற்றும் பிரித்தனையாவுக்கு பயணம் செய்கின்றனர்.
சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் நபர்கள் ஏற்கனவே வேறு நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்தால், அவர்கள் டப்ளின் ஒப்பந்தத்தின்படி அங்கு திரும்ப வேண்டும்.
செயின்ட் கேலன் மாகாணத்திற்குள் நுழைபவர்களில் பலர் ஆஸ்திரியாவில் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளனர் என்பதால் அவர் திருப்பி அனுப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில் செயின்ட் கேலன்மாகாண அதிகாரிகள் தேசிய எல்லையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களிடம் அஸ்திரியாவுக்கு திரும்பி செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.