அமெரிக்காவில் பணம் கொண்டு சென்ற டிரக் லொரியில் இருந்து பணம் பறந்ததால், சாலையில் கிடந்த பணத்தை மக்கள் அள்ளிக் கொண்டு ஓடிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில நெடுஞ்சாலை San Diego-விற்கு அருகிலுள்ள Interstate 5-ன் வடக்கு பகுதியில் பணத்தினை டெபாசிட் செய்வதற்காக Federal Reserve வங்கியை நோக்கி, கடந்த திங்கட் கிழமை காலை டிரக் சென்றுள்ளது.
அப்போது எதிர்பாரதவிதமாக டிரக்கின் பின்பகுதியில் இருந்த ஒரு கதவு திறந்துவிட்டதால், உள்ளே இருந்த பணக் கட்டுகள் அப்படியே காற்றில் பறந்து, சாலையில் சிதறின. இதைக் கண்ட அந்த வழியே சென்ற மக்கள் உடனடியாக தங்களுடைய கார் மற்றும் வாகனத்தினை நிறுத்திவிட்டு, சாலையில் கிடந்த பணத்தினை எடுக்க துவங்கிவிட்டனர்.
இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த FBI மற்றும் California Highway Patrol (CHP) அதிகாரிகள், சாலையில் பணத்தினை எடுத்த மக்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும், சாலையில் கிடந்த பணத்தினை எடுத்துக் கொண்டு சென்ற மக்களை FBI மற்றும் California Highway Patrol (CHP) அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ உள்ளதால், பணத்தினை எடுத்தவர்களை எளிதில் அடையாளம் காண முடியும் எனவும், 48 மணி நேரம் அவகாசம் கொடுக்கிறோம், அதற்குள் வந்து Vista-வில் உள்ள அலுலகத்தில் ஒப்படைக்கும் படியும், அப்படி இல்லை என்றால் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள FBI அதிகாரிகள், எவ்வளவு பணம் காணமல் போயுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
இதன் வீடியோ காட்சியை பிரபல டிக் டாக் பயனாளர் ஒருவர் பதிவிட்டிருப்பது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.