இங்கிலாந்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டுகள், கட்லரி மற்றும் போலிஸ்டரின் பொருட்கள் முழுமையாக தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் தவிர்க்கக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முயல்வதால், இங்கிலாந்தில் யூஸ் அண்டு த்ரோ பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் தடை செய்யப்படலாம் என கூறியுள்ளது.
இங்கிலாந்தில் ஆண்டுக்கு 1.1 பில்லியன் ஒற்றை பயன்பாட்டு (Single Use) தட்டுகளும், 4.25 பில்லியன் கட்லரி பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது.
அவற்றில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் ஆகும். ஆனால் அவற்றில் 10 சதவீதம் மட்டுமே அப்புறப்படுத்தப்பட்டவுடன் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், 12 வார பொது ஆலோசனையில் முன்மொழிவுகளின் கீழ், வணிகங்கள் மற்றும் நுகர்வோர் இந்த பொருட்களுக்கு நிலையான மாற்று பொருட்களை நோக்கி நகர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Wet wipes, சிகரெட் ஃபில்டர், பொட்டலங்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிற கோப்பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருள்களையும் எதிர்காலத்தில் தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
“பிளாஸ்டிக்களால் நமது சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை பேக்கேஜிங்கில் பயன்படுத்துவதைக் குறைக்கவும், குப்பை கொட்டும் பொருட்களில் அதன் பயன்பாட்டை தடை செய்யவும் விரும்புகிறோம்” என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ஜார்ஜ் யூஸ்டிஸ் கூறினார்.
மேலும் “நாங்கள் ஏற்கனவே பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், கிளறிகள் மற்றும் காட்டன் மொட்டுகளுக்கு (Buds) தடை விதித்துள்ளோம், இப்போது மரம் போன்ற மாற்று பொருட்களைப் பயன்படுத்தக்கூடிய கட்லரி கருவிகள் மற்றும் பலூன் குச்சிகளுக்கு தடையை நீட்டிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.
2015 முதல் முக்கிய பல்பொருள் அங்காடிகளில் Single-use carrier bags-க்கான கட்டாயக் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அதன் பயன்பாடு 95% குறைந்துள்ளது.
ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் பகிர்ந்தளிக்கப்பட்ட நிர்வாகங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் மீதான தங்கள் சொந்த கொள்கைகளுக்கு பொறுப்பாகும்.