உலகில் மிகவும் வயதான நபர் என நம்பப்படும், பிலிப்பைன்சைச் சேர்ந்த 124 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
பிலிப்பைன்சின் Negros Occidental மாகாணத்தில் உள்ள Kabankalan-ல் Lola என்றழைக்கப்படும் Francisca Susano என்ற 124 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வசித்து வந்துள்ளார்.இந்நிலையில், இவர் கடந்த திங்கட்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 6.45 மணிக்கு தன்னுடைய வீட்டில் உயிரிழந்துவிட்டதாகவும், அவருடைய இறப்புக்கு என்ன காரணம் என்பதும் இன்னும் தெரியவில்லை.
ஆனால், அவர் கொரோனாவால் இறக்கவில்லை என்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கடந்த 1897-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் திகதி ஸ்பெயின் ஆட்சி காலத்தில், பிறந்துள்ளார்.
இவரின் பிறந்த நாள் உள்ளூர் அரசாங்கத்தால் சாதனையாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கு அவருடைய வயது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
அவர் வசித்து வந்த Kabankalan நகரம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று எங்கள் அன்பான Francisca Susano காலமானார்.
இவர், Negros Occidental மற்றும் Philippines-ல் மிகவும் வயதான நபராக கருதப்படுகிறார். 124 வயதான இவர், உலகின் மிகவும் வயதான நபர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வரும், அது கின்னஸ் உலக சாதனைகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.