இந்திய அணியில் ரோகித் மற்றும் கோலியின் இடத்தை நிரப்ப இளம் வீரர்கள் இருப்பதாக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருந்து வருகிறார்.இவரிடம் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வரும் படி பிசிசிஐ கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் வேறு சில காரணங்களால் ரிக்கி பாண்டிங் அதை நிராகரித்துவிட்டார். இதை அவரே கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய அணியில் டி20 கிரிக்கெட்டில் விளையாடக் கூடிய திறமையானவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால், சீனியர் வீரர்கள் தங்களின் இடங்களை உடனே இழக்கும் அபாயம் இருக்கிறது.
ஒவ்வொரு போட்டியிலும் திறமையை நிரூபித்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் விளையாடுவார்கள். இதனால், தங்களின் பார்மை அவர்கள் இழக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் ரோஹித் , கோலி போன்ற மூத்த வீரர்களின் இடங்களை நிரப்ப 5 பேர் இருக்கிறார்கள்.
பிரித்வி ஷா, வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அடுத்த தலைமுறை இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருப்பார்கள். அவர்களால், சீனியர் வீரர்களின் இடங்களை சுலபமாக நிரப்ப முடியும். எனவே, இந்திய அணியின் எதிர்காலத்திற்கு பெரிய பிரச்சினை இருக்காது என்று கூறியுள்ளார்.