வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொண்ட உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா!

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொண்ட உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா!

பருத்தித்துறை நகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவருக்கு ​கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (24) புதன்கிழமை பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தவிசாளரால் முன்வைக்கப்பட்டது. வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒரு மேலதிக வாக்கினால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 5 கூட்டமைப்பு உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்டை ஆகியவற்றின் உறுப்பினர் தலா ஒருவர் ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் 6 பேரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்பின் போது கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் உடல்நலக் குறைவுடன் காணப்பட்டுள்ளார். அவர் வாக்கெடுப்பின் பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *