பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த தாக்குதலில் ஏழு பொலிசார் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சின் Cannes-ல் ஒருவாரங்களுக்கு முன்பு பொலிஸ் அதிகாரி கத்து குத்து தாக்குதலிலால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், தலைநகர் பாரிஸ் 19-ஆம் வட்டாரத்தில், கடமையில் இல்லாத 7 பொலிஸ் அதிகாரிகள், அங்கிருக்கும் உணவகம் ஒன்றில், உணவை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.
அப்போது, அப்பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படுவதை கண்ட இவர்கள், உடனடியாக அங்கு சென்று, மோதலை தடுக்க முற்பட்டுள்ளனர். ஆனால், அந்த குழுக்கள் பொலிசாரை தாக்கியுள்ளனர்.
மோதலில் ஈடுபட்ட கும்பல், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதால், இவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து இது குறித்து சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைவதற்குள் அவர்கள் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மோதலில் ஈடுபட்ட கும்பல் Brigade des Réseaux Franciliens பகுதியினைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.