திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாங்கேணி ஆற்றில் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக பயணிகள் படகு ஒன்று இன்று (25) முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இந்த படகில் ஒரே நேரத்தில் 25 மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடிய 25 இருக்கைகள் உள்ளன, மேலும் 5 பேர் கொண்ட பணியாளர்கள் மற்றும் ஒரு உயிர்காப்பாளர் இணைக்கப்பட்டுள்ளனர் என்று கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
இந்தக் படகு காலை 7.00 மணி முதல் 11.00 மணி மற்றும் 1.45 மணி வரை இயங்கும் என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
கிண்ணியா குறிஞ்சாங்கேணி ஆற்றில் கடந்த திங்கட்கிழமை படகு கவிழ்ந்ததில் நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.