அர்வென் புயல் பிரித்தானியாவை தாக்கியதில் இதுவரை குறைந்தது 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்க்டிக் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக உருவான அர்வென் புயல் (Storm Arwen) பிரித்தானியாவின் பல பகுதிகளை பயங்கரமாக தாக்கியுள்ளது.
இன்று பிரித்தானியாவின் சில பகுதிகளில் மணிக்கு 90 மைல் (144 km/h) வேகத்தில் இந்த அர்வென் புயல் காற்று தாக்கியதில், மரங்கள் விழுந்து குறைந்தது இரண்டு பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
வடக்கு அயர்லாந்தின் Antrim கவுண்டியில், வெள்ளிக்கிழமை இரவு பலத்த பனிக்காற்று விசியபோது கார் மீது மரம் விழுந்ததில் இறந்தார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர் ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் என கூறப்படுகிறது.
மேலும் GMT நேரப்படி இரவு 11 மணிக்கு முன்பு, லான்காஸ்டரைச் சேர்ந்த ஒருவர் Amblesideஇல் சென்றுகொண்டிருந்தபோது அவர் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்ததாக Cumbria காவல்துறை தெரிவித்துள்ளது.
வடக்கு இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்ட், மணிக்கு 98 மைல் (157 km/h) வேகத்தில் வீசிய காற்றினால் தாக்கப்பட்டதாகவும், தென்மேற்கில் உள்ள Devon-ல் மணிக்கு 92 மைல் வேகத்தில் காற்று வீசியதாகவும் வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு Northumberland, County Durham மற்றும் Tyne and Wear பகுதிகளில் குறைந்தது 55,000 வீடுகள் மின்வெட்டு காரணமாக அவதிப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்த்துள்ளனர்.
இந்நிலையில், இந்த அர்வென் புயல் தொடர்ந்து பலத்த காற்றுடன் பிரித்தானியாவின் பல பகுதிகளை தாக்கும் என்றும், வரும் நாட்களில் நாடு கடுமையான குளிரை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.