கொரோனா வைரஸின் புதிய Omicron மாறுபாட்டிற்கு எதிராக ஒரு பூஸ்டர் தடுப்பூசியை உருவாக்குவதாக, அமெரிக்க மருந்து நிறுவனமான Moderna வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தெற்கு ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில் (Botswana) முதல் முறையாக கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசுக்கு ‘Omicron’ (B.1.1.529) என பெயரிடப்பட்டுள்ளது.இந்த வைரஸின் பாதிப்பு தற்போது போஸ்ட்வானாவில் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வைரஸ், தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் வேகமாக பரவக் கூடியது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதை ‘கவலைக்குரிய வைரஸ் வகை’ என்ற பிரிவில் விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா, போஸ்ட்வானா உட்பட அதனைச் சுற்றியுள்ள கிட்டத்தட்ட 9 தெற்கு ஆப்பிரிக்க நாடுக்ளில் இந்த வைரஸ் வேகமாக பறவைவருகிறது.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து பயணித்தவர்கள் மூலமாக ஹொங்ஹொங், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதர வைரஸ் மற்ற கொரோனா வகைகளை விட இந்த வைரஸ் வேகமாக பரவும், தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதுள்ளனர்.
அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் என அடுத்தடுத்து இந்த 9 தெற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதித்துவருகின்றன.
இந்நிலையில், இந்த வைரசுக்கு எதிராக செயல்படும் வகையில், பூஸ்டர் தடுப்பூசையை உருவாக்கும் முயற்சிகளை வேகமாக தொடங்கியுள்ளதாக பிரபல அமெரிக்க மருந்து நிறுவனமான Moderna அறிவித்துள்ளது.இதற்காக மூன்று உத்திகளை கையாள உள்ளதாக மாடர்னாவின் CEO Stephane Bancel கூறியுள்ளார். அதில் ஒரு உத்தி, தற்போதுள்ள தடுப்பூசியின் அளவை (Dose) அதிகரிப்பது என கூறப்படுகிறது.