ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் அந்நாட்டு அரசு சில பயண விதிகளை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை குறைந்தபாடில்லை. உலகளவில் கொரோனா குறைந்தாலும் ஐரோப்பிய நாடுகள், ஜேர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா உச்சம் அடைந்து வருகின்றது.
இந்நிலையில் சீனாவில் தோன்றிய கொரோனாவை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கொரோனாவில் இருந்து உருமாறி வந்துள்ள நிலையில் இதற்கு ஒமிக்ரான் என்று உலக சுகாதாரத்துறை பெயர்சூட்டியுள்ளது.
இதனை பரிசோதித்த நிபுணர்கள் இது கோவிட் 19 போல அதிக அபாயம் கொண்டது அல்ல.. மிகவும் குறைந்த செயல்திறனையே இந்த வைரஸ் பெற்றுள்ளது என்கிறார்கள். இருப்பினும் இந்த புதிய வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இது வரை இந்த வைரஸ் தொற்று அமெரிக்கா, ஜப்பான் போன்ற 23 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
எனவே ஐரோப்பியாவில் ஒமிக்ரானை கட்டுப்படுத்த கடுமையான சில பயண விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. முக்கியமாக கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கண்டிப்பாக பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.
அதுபோல தடுப்பூசி பெற்றுக்கொண்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து ஐரோப்பாவிற்கு வருபவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்வது அவசியம். அதே நேரம் சுற்றுலாவிற்காக ஐரோப்பியா வரும் பயணிகளும் வரும் நாட்களில் தடை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.