பிறப்பு சான்றிதழ் வெளியிடும் போது புதிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய இலங்கை அடையாள இலக்கத்தையும் பிறப்பு சான்றிதழில் இணைக்கப்படவுள்ளது. பாதுகப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்காக யோசனையை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார்.
ஒரே அடையாள இலக்கத்தை பயன்படுத்துவதன் மூலம் பிறப்பில் இருந்து இறப்பு வரை முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளிலும் அரச மற்றும் தனியார் பிரிவிலும் சேவை பெற்றுக் கொள்ளும் போது அந்த நடவடிக்கை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும் என அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய ஆட்பதிவு திணைக்களத்தின் தகவல் கட்டமைப்பு ஊடாக பதவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பின்னர் அந்த இலக்கத்தை உள்ளடக்கி பதிவாளர் நாயக திணைக்களதத்தினால் எதிர்வரும் நாட்களில் பிறப்பு சான்றிதழ் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.