கொழும்பு காலி முகத்திடலில் நங்கூரமிடப்பட்ட போர்க்கால கப்பல்கள்

கொழும்பு காலி முகத்திடலில் நங்கூரமிடப்பட்ட போர்க்கால கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கடற்படையின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு – காலிமுகத்திடல் கடற்பரப்பில் கடற்படைக்கு சொந்தமான 7 சிறப்பு கப்பல்கள் நங்கூரமிடப்பட்டு மக்களுக்கு காட்சியப்படுத்தப்பட்டுள்ளன.

கடற்படையின் 71 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் முக்கிய கப்பலாக கஜபாகு கப்பல் காணப்படுவதாக அதன் கட்டளையதிகாரி கெப்டன் பி.சி.எம்.ஏ.டி.பெரேரா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் 2019 ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இக்கப்பல் போர் காலத்தில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

இந்தக் கப்பலில் 180 கடற்படையினரை அழைத்துச் செல்லக் கூடிய திறன் உடையதாகும். எனினும் தற்போது 140 கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு மாத காலத்திற்கு எவ்வித தடங்கலும் இன்றி கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவாறான வசதிகளை உள்ளடக்கியதாக இக்கப்பல் காணப்படுகிறது.

அதற்கமைய ஆழ்கடலில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து செயற்பாடுகளை எவ்வித இடையூறும் இன்றி இக்கப்பல் ஊடாக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என கட்டளையதிகாரி கெப்டன் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *