கரீபியன் தீவுகள் பகுதியில் பெட்ரோல் கொள்கலன் வாகனம் வெடித்தது – 60 பேர் பலி

கரீபியன் தீவுகள் பகுதியில் பெட்ரோல் கொள்கலன் வாகனம் வெடித்தது – 60 பேர் பலி

கரீபியன் தீவுகள் பகுதியில் பெட்ரோல் கொள்கலன் வாகனம் வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 கரீபியன் தீவுகள் வடக்கு பகுதி நகரமான கேப்-ஹைடியனில் பெட்ரோல் ஏற்றி வந்த கொள்கலன் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த விபத்து காரணமாக கொள்கலன் வாகனத்தில்  இருந்து வெளியேறிய பெட்ரோலை கண்ட அருகில் இருந்த  மக்கள் பாத்திரங்களில் அதை அள்ளிச் சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீயினால் கொள்கலன் வாகனம் வெடித்து சிதறியது. அதில் 60 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

நூற்றுக்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால்உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.தற்போது மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி, இதனை தேசிய பேரழிவு என்று தெரிவித்துள்ளதுடன  இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு தழுவிய அளவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனதெரிவித்துள்ளார்.

கரீபியன் தீவுகள் பகுதியை சேர்ந்த ஹைதியில் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *