இலங்கை இராணுவ அதிகாரிகள் சிலருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையானது, அமெரிக்காவின் தற்போதைய செயற்பாடு மனித உரிமை பிரச்சினையையும், அரசியல் ரீதியான நோக்கங்களையும் கொண்டதாக தோன்றுவதாக அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றும் கலாநிதி கீத பொன்கலன்(Geedha Pongalan) தெரிவித்துள்ளார்.
பூகோள ரீதியான அரசியலில் இலங்கையினுடைய அண்மைக்கால போக்குகள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
இலங்கை மீதான சர்வதேச ரீதியான அழுத்தங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் இருக்கின்றன. இந்த நிலையில் ஒரு சில இராணுவ அதிகாரிகளின் மீதான தடையின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் பேராசிரியர் கீத பொன்கலன் (Geedha Pongalan) தெளிவுப்படுத்தியுள்ளார்.